×

‘மார்க் ஆண்டனி’ -ஐ முடித்த எஸ்.ஜே.சூர்யா... ஷூட்டிங் நிறைவை கேக் கொண்டாட்டிய படக்குழுவினர் !

 

 விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை எஸ்.ஜே.சூர்யா நிறைவு செய்துள்ளார். 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார்.  இவர்களுடன் ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. 

இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இன்று நிறைவு செய்தார். இதை விஷால் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி எஸ்.ஜே.சூர்யா வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.