×

‘நடிகர் விஜய்’யை சந்தித்த ‘மார்க் ஆண்டனி’ படக்குழு.

 

விஷால் நடிப்பில் தயாராகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் குழுவினர் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 06:30 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு நடிகர் விஜயை நேரில் சென்று சந்தித்து படத்தின் டீசரை போட்டுகாட்டியுள்ளனர்அதை பார்த்த விஜய் படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தொடர்ந்து விஷாலை கட்டியனைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை மினி ஸ்டூடியோ தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அதில், “எனது சகோதரர் மற்றும் ஹீரோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் படத்தின் டீசரை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் ரசிகன் என சொல்லிக்கொள்வதில் என்றென்றும் மகிழ்ச்சிஎன குறிப்பிட்டு விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.