×

அமேசான் பிரைமில் வெளியிட்ட ஒரு வாரத்தில் சாதனை படைத்த ‘மாஸ்டர்’

அமேசான் பிரைமில் 28 மில்லியன் பார்வையாளர்கள் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளதால் படத்தயாரிப்பு நிறுவனமும்,ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர். விஜய்- விஜய் சேதுபதி கூட்டணியில் வெளி வந்துள்ள இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் வெளியிட்ட முதல் வாரத்தில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே செயல்பட திரையரங்குகளில் அனுமதி
 

அமேசான் பிரைமில் 28 மில்லியன் பார்வையாளர்கள் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளதால் படத்தயாரிப்பு நிறுவனமும்,ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர். விஜய்- விஜய் சேதுபதி கூட்டணியில் வெளி வந்துள்ள இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாஸ்டர் வெளியிட்ட முதல் வாரத்தில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே செயல்பட திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் இந்தியாவில் 40 கோடியும், உலக அளவில் 100 கோடியும் வசூலை வாரி குவித்தது மாஸ்டர்.

வெற்றிக்கரமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் கடந்த ஜனவரி 29ம் தேதி ஒடிடியில் வெளியானது.அமேசான் பிரைமில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. இந்த படத்தை அமேசான் பிரைம் வாடிக்கையாளர் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் பார்த்து வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28 மில்லியன் பார்த்துள்ளனர். இது மாஸ்டர் படத்திற்கு மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதனால் பட தயாரிப்பு நிறுவனமும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.