×

மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டியில் ரிலீஸ் ஆவது உண்மைதான் ! ஆனால் நெட்பிலிக்ஸில் இல்லை !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகி 4 கோடி பார்வையாளர்களுடன்
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் மாஸ்டர்.
இந்த படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகி 4 கோடி பார்வையாளர்களுடன் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
மேலும் மாஸ்டர் படம் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் திரையரங்கில் வெளியிடப்படும் என எதிர்பார்த்து வந்த நிலையில், இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகப் போவதாகவும், அதற்கான உரிமத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் உண்மையில்லை என ஒருபுறம் தகவல்கள் பரவி வரும் நிலையில், திரைப்படம் தியேட்டர்களில் தான் முதலில் வெளியிடப்படும் என்றும் அதன் பிறகுதான் ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் என்றும், அவ்வாறு வெளியாகும் படம் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தில் இல்லை அமேசான் பிரைமில் தான் ரிலீஸ் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.