×

ஓடிடியில் வெளியாகிறதா மாஸ்டர்..?? அமேசான் பிரைம் ட்வீட்டால் குழப்பம்… படக்குழு விளக்கம்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார்.. மேலும் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் ஏப்ரல் 9-ம் தேதி படம் வெளியாகி இருக்கும். தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார்.. மேலும்  மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.  அனிருத் இசையமைத்திருக்கிறார்.

அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் ஏப்ரல் 9-ம் தேதி படம் வெளியாகி இருக்கும். தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது வரை மாஸ்டர் படத்திலிருந்து டீசரோ, ட்ரெய்லரோ வெளியாகவில்லை.. ஆனால் இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என செய்திகள் வெளியாகின.. ஆனால்  ‘மாஸ்டர்’  நிச்சயம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என படக்குழு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது..

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) அதிகாலை அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஆகஸ்ட் மாத வெளியீடு என்று ஒரு புகைப்படம் பதிவிடப்பட்டது. அதில், ஆகஸ்ட் மாதத்தில் தேதி வாரியாக வெளியாகும் படங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியீடாக ‘மாஸ்டர்’ பெயர் இடம்பெற்றது. இதன் மூலம் ‘மாஸ்டர்’ ஓடிடி தளத்தில் வெளியீடு எனத் தகவல் பரவியது.
 
இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு விளக்கமளித்துள்ள மாஸ்டர் படக்குழு, “ ‘மாஸ்டர்’ படத்தின் ஃபைனல் அவுட்டை எடுக்கவே இல்லை எனவும்,  படம் கண்டிப்பாகத் திரையரங்கில்தான் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.. மேலும், கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 9-ம் தேதி ‘மாஸ்டர்’ படம் திரையரங்கில் வெளியாகியிருக்கும். அதன்படி, அவர்கள் ஆகஸ்ட் 14-ம் தேதி அமேசான்  தளத்தில்  வெளியிட முடிவு செய்திருப்பார்கள். அதே தேதியைத் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளனர்..