`மழை பிடிக்காத மனிதன்' படத்தின் ஓடிடி அப்டேட்
Aug 17, 2024, 12:00 IST
ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்தார்.இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரிலீசாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகியுள்ளது . இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரமில் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி 14 நாட்களிலே ஓடிடியில் வந்தது குறிப்பிடத்தக்கது.