×

விஜய் 68 திரைப்படத்தில் இணைந்த மகேஷ்பாபு பட நடிகை

 


விஜய் நடிக்கும் 68 வது திரைப்படத்தில் பிரபல நடிகை மீனாக்‌ஷி சவுத்ரி இணைந்துள்ளார். 

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ்   டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. 

இந்நிலையில், இத்திரைப்படத்தில் மீனாக்‌ஷி சவுத்ரி இணைந்துள்ளார். படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுக்கு நன்றி தெரிவித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே புன்னகை அரசி சினேகா இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.