×

மறைந்த இயக்குநர் கே. பாலசந்தருக்கு நினைவு சதுக்கம்- தமிழ்நாடு அரசு முடிவு.

 

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு நினைவு சதுக்கம் அமைப்பதற்கு சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடத்திலிருந்து சினிமாவிற்குள் நுழைந்த கே. பாலசந்தர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ‘நீர்க்குமிழி’. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 9 தேசிய விருதுகளையும், 12 பிலிம்பேர் விருதுகளையும், ஒரு தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கு பல நடிகர்களையும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், கே.பாலச்சந்தரின் நினைவாக சென்னையில் நினைவு சதுக்கம் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  மொத்தம் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. அதில் ஒன்றாக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் காவிரி மருத்துவமனை அருகில் ஆயிரம் சதுரடி அளவில் உள்ள போக்குவரத்து இடத்திற்கு கே.பாலசந்தர் சதுக்கம், கே.பாலசந்தர் ரவுண்டானா அல்லது கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.