×

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்து பாராட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!

 

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டியிருக்கிறார்.

அபினேஷ் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. யுவராஜ் கணேசன் தயாரித்து வெளியிட்ட இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் வசூலும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இப்படம் குறித்து, “’டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம்.