பிரபல நடிகரை புகழ்ந்த அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்...!
Feb 6, 2025, 15:51 IST
தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர், சமூக வலைதளங்களில் தனது பக்கத்தில் தான் பங்கேற்ற நிகழ்வுகள், தலைவர்களுக்கு வாழ்த்து மற்றும் தனது துறை சம்பந்தமான அறிவிப்புகள் என ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு சந்தித்தது குறித்து தற்போது அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கலைஞர், இன்றளவும் மீம்(Meme) உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலு அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.