"சிம்பு விரைவில் திருமண பத்திரிக்கை அனுப்பனும்" -இப்படி கேட்ட நடிகர் யார் தெரியுமா ?
நடிகர் சிம்பு பல வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் .இயக்குனர் டீ.ராஜேந்தரின் மகனான இவர் நடித்து சமீபத்தில் கூட தக் லைஃப் படம் வெளியானது .இவரை பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருவதுண்டு .மேலும் இவர் 40 வயதுக்கு மேலாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை .இதனால் பலர் அவரிடம் நேரிடையாக இது பற்றி கேட்டாலும் அவர் சரியான பதில் சொல்லாமல் நழுவி விடுவதுண்டு .நடிகர் சிம்புவுக்கு நடிகர் மிர்ச்சி சிவா நல்ல நண்பர் ஆவார்
இந்நிலையில் இயக்குனர் ராம், மிர்ச்சி சிவா, குழந்தை செல்வன் மிதுன் ஆகியோர் மதுரை வெற்றி சினிமாஸ் திரையரங்கிற்கு வருகை தந்து பறந்து போ திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தனர்.
அப்போது ரசிகர்கள் சிவாவிடம், “நடிகர் சிம்பு உங்கள் நண்பர் அவருக்கு எப்போது திருமணம்?” என கேட்டதற்கு, அவர் கொடுத்த பதில் சிரிப்பலைகளை எழுப்பியது. அவர், “இதே இடத்தில் நடிகர் சிம்புவிற்கு இதே இடத்தில் கோரிக்கை வைக்கிறேன், நடிகர் சிம்பு சார் இந்த கேள்விகளை நாம் தவிர்க்க வேண்டும், விரைவில் திருமண பத்திரிக்கையை எங்களுக்கு அனுப்புங்கள்” என கோரிக்கை வைத்தார்.