×

மீண்டும் வெளியாகும் மிஷ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம்

 

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள மிஷ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. இப்படத்தில், நவீன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 5-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படம் வெளியாகிறது.