×

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள 'அரியவன்'... மித்ரன்‌ ஜவஹர் படத்தின் மிரட்டலான டீசர் !

 

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரியவன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

'யாரடி நீ மோகினி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். அதன்பிறகு தனுஷை இரண்டாவது முறையாக குட்டி படத்தை இயக்கினார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷை வைத்து 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்திற்கு பிறகு 'அரியவன்' என்ற புதிய படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை மாரிச்செல்வன் எழுதியுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் ஈஷான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரணாலி, டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

எஸ்.ஜி.பி. மீடியா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெண்கள் மீதான  வன்முறைகளுக்கு எதிராக தனி ஒருவனாக போராடும் இளைஞனின் போராட்டம் இந்த படம். இந்நிலையில் இந்த படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷனில் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/-tPCSijS7fE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-tPCSijS7fE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">