×

ஆஸ்கர் வென்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ இயக்குனருக்கு 1கோடி... ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்த முதல்வர் !

 

ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபென்ட் விஸ்பர்ரஸ்’ படத்தின் இயக்குனருக்கு ரூபாய் 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பத்தில் ‘தி எலிபென்ட் விஸ்பர்ரஸ்’ ஆவணம் படம் முழுமையாக உருவாக்கப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை மீட்ட வனத்துறையினர் முதுமலை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். 

இந்த குட்டியை யானையை தொப்புக்காடு யானை முகாமில் பராமரிப்பாளர்களாக இருந்த பொம்மன், பெல்லி தம்பதி பாசமாக வளர்த்தனர். காட்டு நாயக்கர் பழங்குடியினத்தை சேர்ந்த அவர்கள், அந்த யானை குட்டியை பாசத்துடன் வளர்த்த கதைதான் ஆவணப்படமாக உருவாகி வெளியானது. இந்த உணர்புப்பூர்வமான தத்ரூபமாக ஆவணமாக கார்த்தி கொன்சால்வ்ஸ் என்பவர் இயக்கினார்.  

சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிறந்த ஆணவப்பட குறும்பட பிரிவில் இந்தியாவில் இருந்து ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ படம் ஆஸ்கர் விருதை வென்றது. உலக ரசிகர்களை கவர்ந்த இந்த ஆவணப்படம் தமிழகத்திற்கும், முதுமலை புலிகள் காப்பத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது. 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண படத்தின் இயக்குனர் கார்த்தி கொன்சால்வ்ஸ் சந்தித்து ஆஸ்கர் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது அப்படத்தின் இயக்குனருக்கு 1 கோடி ரூபாய் காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊட்டியில் வளர்ந்து, நம் தமிழ்நாடு அரசின் யானைப் பாதுகாப்பு முயற்சிகளை ஆஸ்கர் வரை கொண்டு சென்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ் அவர்களைப் பாராட்டி ஊக்கத்தொகையாக ரூ.1 கோடி வழங்கினேன். முகம்தெரியாத பலரின் உழைப்பைத் தம் படைப்பால் உலகறியச் செய்ததற்குப் பாராட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.