எம்.குமரன் பாகம் 2 திரைக்கதை தயார்... மோகன்ராஜா அப்டேட்..
2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் எம் .குமரன் S/O மகாலட்சுமி. இந்த படத்தை பிரபல இயக்குனரும் ஜெயம் ரவியும் அண்ணனுமான எம். ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் நதியா, அசின், விவேக், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அம்மா – மகன் இருவருக்கும் இடையே உள்ள அன்பினை மையமாக வைத்து வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
தற்போது 19 வருடங்கள் கழித்து எம் .குமரன் S/O மகாலட்சுமி இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக மோகன் ராஜா தெரிவித்துள்ளார். படத்திற்கான திரைக்கதையை நிறைவு செய்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால், முதல் பாகத்திலேயே நதியா இறந்து விட்டதால், இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனி ஒருவன் பாகம் இரண்டையும் இயக்க உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.