நவீன யுக காதல் பேசும் 'மாடர்ன் லவ்' சென்னை... 6 இயக்குனர்கள் இயக்கிய ஆந்தாலஜி படம் !
6 இயக்குனர்கள் இயக்கிய 'மாடர்ன் லவ் சென்னை' ஆந்தாலஜி டிரெய்வர் வெளியாகியுள்ளது.
உலக சினிமாவில் ஆந்தாலஜி திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான திரைப்படம் ‘மாடர்ன் லவ்’. உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த ஆந்தாலஜி திரைப்படம் இந்தியில் ‘மார்ன் லவ் மும்பை’ என்ற பெயரில் வெளியானது.
இந்த ஆந்தாலஜி வெப் தொடரின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ளது ‘மாடர்ன் லவ் சென்னை’. இந்த வெப் தொடர் வரும் மே 18-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. இதையொட்டி இந்த வெப் தொடரின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நவீன யுக காதலை பேசும் இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆந்தாலஜி தொடரை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர், தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு பேர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளனர். இந்த வெப் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார், ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஆறு அத்தியாசங்களை கொண்ட இந்த வெப் தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.