☰
×

ஹீரோவாகும் மொத ராத்திரி பட நடிகர் -எந்த படம் தெரியுமா ?

 

அறிமுக இயக்குநர் எட்வின் ஜி.ஜே. இயக்கத்தில் ‘மொத ராத்திரி’ படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் டி.கே. கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘லவ் லாக்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
கௌசல்யா, லாவன்யா, ராஜ் எம்ஆர்கே, அன்பழகன், ரமா, உதய் மகேஷ், அஜித் கோஷி, தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரசோமிகின் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மூன்ராக்ஸ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அர்ஜுன் மேற்கொள்ள கலை இயக்கத்தை எஸ்.ஏ. ராஜா கவனிக்கிறார். லவ் ட்ராமா ஜானரில் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ஆர். சிவராமன் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ‘‘ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் காதலிக்கிறார்கள். பறவைகளின் மென்மையான இறகு மீது கடினமான பாறாங்கல்லை வைத்தால் இறகுகளின் எதிர்வினை என்ன? என்பதை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், யதார்த்தமான தினசரி வாழ்வியலுடன் இணைத்து, உணர்வுபூர்வமாக ‘லவ் லாக்’ படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.