☰
×

புதுமுகங்களுடன் மொத ராத்திரி பட இயக்குனரின் அடுத்த படம் 

 


அறி​முக இயக்​குனர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன், ஏ.வெங்​கடேஷ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வெளியான படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்துள்ள இப்​படம் பெண்கள், குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்​பை பெற்​றது. ஒடிடியில் வெளியான பிறகும் ஒரு சில நாட்கள் திரையரங்கில் கூட்டம் காணப்பட்டது.
இந்நிலையில் ‘மொத ராத்திரி’ படத்தின் வெற்றி குறித்து பேசிய இயக்குனர் ராஜா கருப்​ப​சாமி, ‘இப்படம் எதிர்​பார்த்​ததை விட அதிக வெற்​றியை பெற்​றிருக்​கிறது.
இதில் நான் நடித்​தது பற்றி பலர் கேட்கிறார்கள். எனக்கு நடிப்பு ஆசை இருந்​தது. இருந்​தா​லும் நான் நடித்த கேரக்​டரில் வேறொரு நடிகரைத்​தான் பேசி வைத்திருந்தோம். பட்​ஜெட் உள்​ளிட்ட விஷ​யங்​களால் கடைசி நேரத்தில் அவரை நடிக்க வைக்க முடிய​வில்​லை. அதனால் நான் நடிக்க வேண்​டிய​தாகி​விட்​டது. அடுத்து சில வாய்ப்பு​கள்​ வந்​திருக்​கின்றன. அடுத்​து நான் இயக்கும் படமும்​ ஊர் கதையாகத்​தான்​ இருக்கும்​. அதில் புது​முகங்​கள்​ நடிக்​க இருக்​கிறார்​கள்​. அதற்கான வேலையை தொடங்கிவிட்டோம்’ என்றார்.