×

மோகன்லால் - பிருத்விராஜ் கூட்டணியில் உருவான ‘எம்புரான்’ ட்ரெய்லர் வெளியீடு...!

 

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவாகி உள்ள படம் ‘எம்புரான்’ . இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. மலையாளத்தில் அதிக திரையரங்குகள், முதல் நாளில் அதிக வசூல் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இப்படம் படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், அதற்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாக ட்ரெய்லர் இப்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.  <a href=https://youtube.com/embed/-ERYOeh3PO0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-ERYOeh3PO0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

3 நிமிடங்கள் நீடிக்கும் இந்த ட்ரெய்லர், அரசியல் - ஆக்‌ஷன் - டிராமா ஜானரில் பிரம்மாண்ட மாஸ் சினிமாவாக ‘எம்புரான்’ உருவாகி இருப்பதை உறுதி செய்கிறது. ட்ரெய்லரின் பாதியில் அரசியல் வசனங்களுடன் மோகன்லால் கதாபாத்திரத்துக்கான பில்டப் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.