×

தீ பறக்க மீன் வறுத்த மோகன்லால்… வைரல் வீடியோ!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படங்களில் நடிப்பது தவிர பொழுபோக்கிற்காக விதவிதமான உணவுகளை சமைக்கவும் செய்வார். அப்படி சமைக்கும் உணவுகளை சக நடிகர்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்துவார். த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால் தன் சக நடிகர்களான மீனா, எஸ்தர் அனில், அன்சிபா ஆகியோருக்கு வீட்டிலிருந்து பிரியாணி எடுத்துவந்து விருந்தளித்தார். அதைச் சாப்பிட்ட மூவரும் சுவையால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக நகைச்சுவையாக பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. View this post on Instagram A post shared by Sameer
 

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படங்களில் நடிப்பது தவிர பொழுபோக்கிற்காக விதவிதமான உணவுகளை சமைக்கவும் செய்வார். அப்படி சமைக்கும் உணவுகளை சக நடிகர்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்துவார்.

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால் தன் சக நடிகர்களான மீனா, எஸ்தர் அனில், அன்சிபா ஆகியோருக்கு வீட்டிலிருந்து பிரியாணி எடுத்துவந்து விருந்தளித்தார். அதைச் சாப்பிட்ட மூவரும் சுவையால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக நகைச்சுவையாக பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மோகன்லால் தீ பறக்க மீன் சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை மோகன்லாலின் நெருங்கிய நண்பரான தொழிலதிபர் சமீர் ஹம்சா எடுத்துள்ளார். “இது கொச்சியில் உள்ள அவரது பிளாட். இந்த ஸ்டைல் சமையலுக்கு flambé என்று பெயர். இது அவருக்கு புதிதல்ல. ஆனால் அவர் இந்த நேரத்தில் அதை முயற்சித்தார். அவரது சமையல் அனைத்தும் உடனடியாக நடக்கிறது. அவர் முன்பே எதையும் திட்டமிடவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மோகன்லால் தற்போது பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘அராட்டு’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தற்போது பாலக்காட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். மோகன்லால் நெய்யட்டிங்கர கோபன் என்ற பெயரில் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.