மோகன்லால் நடித்த `எம்புரான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Apr 17, 2025, 22:59 IST
மோகன்லால் நடித்துள்ள `எம்புரான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் “லூசிஃபர். இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் “எல் 2: எம்புரான்` கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.
‘எம்புரான்' திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.