சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் மோகன்லால்...?
May 10, 2025, 19:12 IST
நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து
முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து குட் நைட் திரைப்பட இயக்குநரான விநாயக் சந்திரசேகர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் தந்தை மகனுக்கு இருக்கும் பந்தத்தை மையமாக வைத்து உருவாகும் கதையாகும். படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாப்பாத்திரத்தில் மோகன்லால் நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.