×

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் மோகன்லால்

 

அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் அள்ளியது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாள் அன்று இப்படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்தில் மலையாள பிரபலம் மோகன்லால் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.