த்ரிஷ்யம் 3 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது
மோகன்லாலின் த்ரிஷ்யம் -3 படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
பிரபல இயக்குநரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அதன் பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முதல் பாகத்தைப் போல இரண்டாவது பாகம் தனது வெற்றியை தக்க வைத்துக் கொண்டது. அத்துடன் இதுவரை வெளியான திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தில் இந்தப் படம் தான் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தது எனவும் பலராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க படக் குழுவினர் முடிவெடுத்து கடந்த ஜூன் மாதம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இந்த நிலையில் இப்படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மேலும் இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மலையாளத்தில் எடுக்கப்பட்ட த்ரிஷ்யம் படத்தில் இரண்டு பாகங்களும் தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முதல் பாகம் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக்கும் செய்யப்பட்டது.