×

2 நாளில் ரூ.100 கோடியை அள்ளிய மோகன்லாலின் 'எம்புரான்'...!

 

நடிகர் மோகன் லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் 2 நாளில்  ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது ’எம்புரான். கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான படம் ’லூசிஃபர்” படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு முரளி கோபி கதை
எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.



ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் ’எம்புரான்’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் விஷ்வல் மற்றும் மேக்கிங் பற்றி மக்கள் பலரும் பாராட்டி இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான 22 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. தற்பொழுது உலகளவில் திரைப்படம் 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.