×

ரஜினிகாந்த் உடன் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ் பிரபலம்.. கூலி சர்ப்ரைஸ் அப்டேட்

 

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கூலி படத்தின் அறிவிப்பிற்கான ப்ரோமோ வெளியானது முதல் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கூலி படத்தின் ப்ரோமோவில் இடம்பெற்ற டிஸ்கோ என்ற பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. அந்த ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதை என தெரிகிறது. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் மேலும் பல்வேறு திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியானது.

சவுபின் ஷஹீர் கும்பலாங்கி நைட்ஸ், மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்துள்ள ’வேட்டையன்’ படத்தில் ஃபகத் ஃபாசில் ரஜினியுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஜினிகாந்த் படத்தில் சவுபின் ஷஹீர் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.