×

மத அரசியலுக்கு எதிராக சாட்டை சுழற்றும் மூக்குத்தி அம்மன் படத்தின் ட்ரைலர் வெளியானது!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா மிரட்டும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை வேல்ஸ் பிலிம் இன்டெர்னர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். நயன்தாரா இந்தப் படத்தின் அம்மனாக நடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ம்ருதி வெங்கட், ஊர்வசி, மௌலி உள்ளிட்டோர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படம் முழுக்க முழுக்க மதம் சார்ந்த கருத்துக்களைப் பேசுவதாக உள்ளது. “கடவுள்
 

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா மிரட்டும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை வேல்ஸ் பிலிம் இன்டெர்னர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். நயன்தாரா இந்தப் படத்தின் அம்மனாக நடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ம்ருதி வெங்கட், ஊர்வசி, மௌலி உள்ளிட்டோர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படம் முழுக்க முழுக்க மதம் சார்ந்த கருத்துக்களைப் பேசுவதாக உள்ளது. “கடவுள் இல்லனு சொல்றான் பாரு அவன் ஓகே. ஆனா ஒரு கடவுள உசத்தி இன்னொரு கடவுள திட்டுறான் பாரு. அவன் டேஞ்சர்” என்பது மாதிரியான வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

மூக்குத்தி அம்மன் படம் அம்மொருதல்லி என்ற பெயரில் தெலுங்கில் வெளியாக உள்ளது. தெலுங்கு வெர்சனின் ட்ரைலரை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

மூக்குத்தி அம்மன் படம் தீபாவளி தினத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.