இன்று அதிக படங்களில் இசையமைக்கும் இசையமைப்பாளர் யார் தெரியுமா ?
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெறும் மூன்று ஆல்பம் பாடல்களை வெளியிட்டிருந்தாலும், தற்போது எட்டு பெரிய படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சூர்யா, அல்லு அர்ஜுன், கார்த்தி போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களும் அடங்கும். இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், அவருக்கு இத்தனை வாய்ப்புகள் எப்படி கிடைத்தன என்பது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளார். சிலர், அவர் பிரபல பாடகரின் மகன் என்பதால் இந்த வாய்ப்புகள் வந்ததாக கூறுகின்றனர். இதனால், சாம் சி.எஸ் போன்ற அனுபவமிக்க இசையமைப்பாளர்களுக்கு ஏன் பெரிய படங்கள் கிடைப்பதில்லை என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த சாம் சி.எஸ், சாய் அபயங்கரின் திறமையைப் பாராட்டினார். "சாய் ஒரு திறமைமிக்க இசைக்கலைஞர் என்பது எனக்குத் தெரியும். அவரை ஒப்பந்தம் செய்த இயக்குநர்களும் அவரது திறனை அறிவார்கள். ரசிகர்களுக்கு ஏன் இது தெரியவில்லை என்றால், அவரது படங்கள் ஒன்று கூட இன்னும் வெளியாகவில்லை. ஆனால் உண்மையில் அவரிடம் ஏராளமான திறமை உள்ளது. அவர் பல பாடல்களை உருவாக்கியுள்ளார். இ யக்குநர்கள் அவரது வேலையை பிடித்ததால் மட்டுமே அவரை தேர்வு செய்கின்றனர்"என்றார் .