×

மௌனராகம் பட புகழ் ஆர். சங்கரன் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல் 

 

இயக்குநரும், ‘மௌனராகம்’ படத்தில் ரேவதி அப்பாவாக நடித்தவருமான ரா.சங்கரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ‘ஒரு கைதியின் டைரி’, ‘பகல் நிலவு’, ‘அழகர் சாமி’, ‘மௌன ராகம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது, ‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’ போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார். இயக்குநர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ரா.சங்கரன் இன்று காலமானார்.