மே 1 வெளியாகும் திரைப்படங்கள்... நடிகர் சூர்யா வாழ்த்து...!
மே 1 ஆம் தேதியான நாளை, சூர்யாவின் ரெட்ரோ, நானியின் ஹிட் 3, சசிகுமாரின் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படங்கள் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள புதிய படம், 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். நாசர், ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ், ஜோஜி ஜார்ஜ், சுஜித் சங்கர், சுவாஷிகா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
அதேபோல், அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் சசிகுமார் உடன், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை வெளியாகிறது.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் தயாரித்துள்ளனர். நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், படத்தின் விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்" படத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.