×

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள க்ரைம் திரில்லர் படம்-என்ன டைட்டில் தெரியுமா ?

 

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘விடியும் காத்திரு’. ஆர். அரவிந்த ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரு காவல் அதிகாரிகள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சாவித் துவாரத்தின் வழியே பயத்துடன் பார்க்கும் எம்.எஸ். பாஸ்கரின் தோற்றமும், “You Are Next” என்ற வாசகமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சி. சத்யா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘விடியும் காத்திரு’ திரைப்படம் உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.