☰
×

ஹீரோவாக வித்தியாசமான போலீஸ் கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் -எந்த படம் தெரியுமா ?

 

 ‘பார்க்கிங்’ என்ற படத்துக்காக தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘விடியும் காத்திரு’. மற்றும் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, ராகேஷ், பேபி ஸ்ரீஜிதா நடித்துள்ளனர். பிரெண்ட்ஸ் புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் எம்.ரவிச்சந்திரன், அயோத்தி, வளர்மதி தயாரித்துள்ளனர். உத்ரா புரொடக்‌ஷன்ஸ் படத்தை வெளியிடுகிறது. ஆர்.அரவிந்தராஜன் எழுதி இயக்கியுள்ளார்.

சி.சத்யா இசை அமைக்க, ஜி.தாமோதரன் எடிட்டிங் செய்து ஒளிப்பதிவு செய்துள்ளார். மெட்ரோ மகேஷ் சண்டைப் பயிற்சி அளிக்க, ராஜன் வலிவிட்டான் அரங்கம் அமைத்துள்ளார். ஐஸ்வர்யா நடனப் பயிற்சி அளித்துள்ளார். படம் குறித்து ஆர்.அரவிந்தராஜன் கூறியதாவது:

காமெடி, குணச்சித்திரம், வில்லன் என்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் எம்.எஸ்.பாஸ்கரிடம் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என்று சொன்னபோது பயந்தார். இது கமல்ஹாசன் சார் நடிக்க வேண்டிய கதை என்று சொன்ன பிறகு மனம் மாறி சம்மதித்தார். ஹீரோவாக நடிக்க வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்துள்ளார். அவரது வித்தியாசமான போலீஸ் கேரக்டர் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.