×

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக் திரைப்படம் -யார் ஹீரோயின் தெரியுமா ?

 

மறைந்த பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை சம்பவங்களை மையமாக கொண்ட பிரமாண்டமான பயோபிக் திரைப்படம் உருவாக்கப்படுகிறது. சென்னையிலுள்ள தி மியூசிக் அகாடமியில் அறிவிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும், உணர்வுப்பூர்வமான மற்றும் கலாச்சார தொடர்பை தக்கவைக்கும் வகையிலும் இசையை உருவாக்கும் அவரது பங்களிப்பு, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை உலகத்தையும், புதிய தலைமுறையையும் இணைக்கும் முக்கிய பாலமாக அமையும். எம்.எஸ்.சுப்புலட்சுமி கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ், பன்னி வாசு இணைந்து தயாரிக்கின்றனர். கவுதம் தின்னனூரி இயக்குகிறார்.