×

முகேன் ராவ் நடித்துள்ள 'ஜின்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ்...!

 

முகேன் ராவ் நடித்துள்ள ’ஜின்” படத்தின்  டிரெய்லர் வெளியாகி உள்ளது. 
 
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் முகேன் ராவ். இவர் 'வேலன்' என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தற்போது டி.ஆர்.பாலா தயாரித்து இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'ஜின்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முகேன் ராவ் மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  <a href=https://youtube.com/embed/NZybWUmx1PY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/NZybWUmx1PY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">


மேலும் பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அர்ஜூன்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்கிறார். திபக் படத்தொகுப்பு செய்கிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாகக் கொண்டு திகில், ஆக்சன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்த படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற மே 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.