மருத்துவப் பரிசோதனைக்குப் பின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்...
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டது இதற்கு காரணம் எனக்கூறப்பட்டது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மருத்துவமனை தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சில வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு அவர் நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.