புதிய இசை நிறுவனத்தை தொடங்கியுள்ள இசையமைப்பாளர் டி இமான்..! திரைத்துறையினர் வாழ்த்து..
Updated: Nov 15, 2024, 17:07 IST
தளபதி விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலமாக இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்தவர் டி.இமான். தொடர்ந்து பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாகிளர் இடத்தை பிடித்தார். இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் அவர், திரைப்பயணத்தில் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார், “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இமான், தற்போது DI Sound Factory என்னும் சொந்த இசை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.