மகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள்... இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான பதிவு
Jan 25, 2025, 18:48 IST
பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் காலமானார்.
பவதாரிணி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மறைந்த மகள் பவதாரிணியின் நினைவு தினத்தை ஒட்டி இசைஞானி இளையராஜா உருக்கமாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, என் அருமை மகள் பவதாரிணி எங்களைவிட்டு பிரிந்த நாள். அன்பே உருவான இந்த மகள் பிரிந்த பிறகுதான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம், எனது கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் எனது குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டது எனக்கு இப்போது வேதனையை தருகிறது.