என் முதல் ப்ரோபோசல் நான் 6வது படிக்கும் போது வந்தது - நடிகை அனுஷ்கா ஓபன் டாக்..!
இப்படிப்பட்ட நிலைமையில்தான் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்தார் அனு. அந்தப் படங்கள் இந்திய அளவில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதுமட்டுமின்றி அனுஷ்காவும் இந்திய அளவில் ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்துக்கொண்டிருந்தவர்; இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகரித்து பின்னர் குறைக்க முடியாமல் திணற ஆரம்பித்தார். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் சுத்தமாக நின்று போயின. அதனையடுத்து சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர்; மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இப்போது காதி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகிறது.
இந்நிலையில் தனக்கு வந்த காதல் ப்ரோபோசல் குறித்து பேசியிருக்கிறார் அனுஷ்கா. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தபோது எனது வகுப்பில் ஒரு பையன் படித்தான். அவன் என்னிடம் வந்து, ‘நான் உன்னை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன்’ என்று கூறினான். அப்போது ஐ லவ் யூ என்றால் என்னவென்றுகூட எனக்கு தெரியாது. ஆனாலும் நான் அந்த ப்ரோபோசலுக்கு ஓகே என்று சொன்னேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அந்த சம்பவம் எனது வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது” என்றார்.