நானியின் HAAN TOH - சர்பிரைஸ் போஸ்டரால் ரசிகர்கள் மகிழ்ச்சி
Sep 4, 2024, 13:00 IST
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. நானி நடிப்பில் சூர்யாஸ் சாட்டர்டே என்ற படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இதுவரை உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து நானி அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். கோர்ட் என்ற படத்திலும் மற்றும் நானியின் 32- படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நானியின் 32 படத்தை குறித்து தற்பொழுது படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். படத்தின் புதிய அறிவிப்பை செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். போஸ்டரில் ரத்தம் படிந்த கை கார் ஸ்டீரிங்ல் இருக்கிறது. ஹான் தோ என்ற வாக்கியம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.