சமந்தா புகைப்படங்களை நீக்கிய நாக சைதன்யா
Oct 29, 2024, 17:05 IST
நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்தனர். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாகக் கடந்த 2021-ம் ஆண்டு திடீரென விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார் நாக சைதன்யா. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ள சோபிதா, தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக நடித்திருந்தார். சோபிதாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நவம்பரில் திருமணம் நடக்க இருக்கிறது.இந்நிலையில் சமந்தாவுடன் இருக்கும் சில புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருந்தார் நாக சைதன்யா. சோபிதாவுடன் திருமணம் நடைபெற இருப்பதால் அந்தப் புகைப்படங்களை தற்போது அவர் நீக்கியுள்ளார்.