நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்த ‘தண்டேல்’ ஓடிடி. ரிலீஸ் அப்டேட்...!
Mar 2, 2025, 18:51 IST
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடித்துள்ள திரைப்படம் ’தண்டேல்'.
இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்..படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் சாய் பல்லவியில் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர்.
இந்நிலையில், தண்டேல் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் மார்ச், 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.