ரஜினியுடன் இணையும் நாகர்ஜூனா ; பிறந்த நாள் வாழ்த்து கூறி போஸ்டரை வெளியிட்ட படக்குழு
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கூலி படத்தின் அறிவிப்பிற்கான ப்ரோமோ வெளியானது முதல் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கூலி படத்தின் ப்ரோமோவில் இடம்பெற்ற டிஸ்கோ என்ற பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. அந்த ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதை என தெரிகிறது. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் மேலும் பல்வேறு திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் சவுபின் ஷஹீர் (Soubin Shahir) கூலி படத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து, நடிகர் நாகர்ஜூனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது போஸ்டரை வெளியிட்டு, அவரும் கூலி படத்தில் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூலி படத்தில் நாகர்ஜூனா, சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் படத்தில் நாகர்ஜூனா நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.