×

கவர்ச்சியான ரோல்களில் நடிக்க மாட்டேன் : நடிகை நமிதா ஓபன் டாக்..

 

கடந்த 2004 ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து ஏய், பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, தீ, பில்லா, அழகான பொண்ணுதான், இளமை ஊஞ்சல் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து நமிதா, தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நமிதா, எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடர்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஒரு படத்தில் வில்லி ரோலில் நடித்து வருகிறேன். இனி கவர்ச்சியான ரோல்களில் நடிக்கமாட்டேன் என்று நமிதா தெரிவித்துள்ளார்.