‘பிளடி ரோமியோ’ என்ற ரொமான்டிக், ஆக்ஷன் படத்தில் நானி -ஹீரோயின் யார் தெரியுமா ?
ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம் ‘தி பாரடைஸ்’. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து ‘பிளடி ரோமியோ’ என்ற ரொமான்டிக், ஆக்ஷன் படத்தின் நானி நடித்து வருகிறார். இப்படத்தை சுஜித் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்டமாக ஐதராபாத்தில் வரும் 19ம் தேதி முதல் படப்பிடிப்பு நடக்கிறது. அதில் படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
இதற்காக ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் பிரத்யேக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டார்க் காமெடி ஆக்ஷன் டிராமாவாக இப்படம் உருவாகிறது. இந்நிலையில் ‘பிளடி ரோமியோ’ படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரீத்தி முகுந்தன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.