‘கிளாடியேட்டர்’ போன்ற ஒரு வரலாற்று ஆக்ஷன் காவியத்தில் நடிக்க ஆசை -நானி தகவல்
‘தி பாரடைஸ்’ படத்துக்கு பிறகு, நானி தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வருகிறார். அவர் கூறியது: நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது பாக்ஸ் ஆபீஸ் வசூல் அல்லது வெள்ளிக்கிழமை ரிசல்ட்டை மனதில்கொண்டு கணக்குப் போட்டுப் படங்களை ஒப்புக்கொள்வதில்லை. என் மனதிற்கு எந்தக் கதை சரியாகப் படுகிறதோ, அதைத்தான் தேர்வு செய்கிறேன்.
ஒரு படத்தில் கமிட்டானால் அடுத்த 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அதே படத்தில்தான் நான் பயணிப்பேன். அதனால், முதலில் அந்த ஷூட்டிங் ப்ராசஸை நான் என்ஜாய் பண்ண வேண்டும். ஒரு புதுமுக இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வரும்போது, அவருக்கு இயக்கம் பற்றிய அனுபவம் இருக்கிறதா என்பதைவிட, சினிமா மீது அவருக்கு எந்தளவிற்குப் பேராசையும் காதலும் இருக்கிறது என்பதைத்தான் முதலில் பார்ப்பேன்.
அந்தப் பேரார்வம் இருந்தால் அனுபவமின்மையை எளிதாகக் கடந்துவிட முடியும். எனக்குச் சிறுவயதிலிருந்தே ‘கிளாடியேட்டர்’ போன்ற ஒரு வரலாற்று ஆக்ஷன் காவியத்தில் நடிக்க வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது. அதேபோல ‘தி பர்சூட் ஆஃப் ஹாப்பினஸ்’ படமும் என்னை மிகவும் பாதித்த ஒன்று. இப்போது இயக்குநராகும் எண்ணம் எதுவும் இல்லை. ஒரு நடிகனாக இந்த நிலையை நான் மிகவும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்..