×

National Film Awards 2023: சிறந்த தமிழ் படமாக ‘கடைசி விவசாயி’ தேர்வு !

 

சிறந்த தமிழ் படமாக ‘கடைசி விவசாயி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

69வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர், நடிகைகள் என பல பிரிவுகளில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த விருது அழகியல் மற்றும் தொழில்நுட்ப சிறப்பு மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களின் தயாரிப்பை ஊக்குவிப்பதாக இருக்கும். 

இந்தியாவில் உள்ள 28 மொழிகளில் மொத்தம் 280 திரைப்படங்கள் மற்றும் 23 மொழிகளில் 158 நான் ஃபீச்சர் திரைப்படங்கள் பரிசீலனைக்கு பெறப்பட்டன. தமிழ் சினிமாவில் ‘கடைசி விவசாயி’ விவசாயி சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. 

 இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'கடைசி விவசாயி'.  ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை அடுத்து மணிகண்டன், விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு கூட்டணி இரண்டாவது முறையாக இந்தப் படத்திற்காக இணைந்தனர். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.