'சமந்தா'வுக்கு கிஃப்ட் அனுப்பிய 'நயன்தாரா'!- வைரல் புகைப்படம்.
தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினான நயன்தாரா தனது தோழியான சமந்தாவுக்கு ஸ்பெஷலான கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளதாக புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.
நடிப்பு, குடும்பம், பிசினஸ் என ஆல் ரவுண்டராக இருக்கும் நயன்தாரா தற்போது 9ஸ்கின் என்ற அழகு சாதன பொருள் நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதனை மலேசியாவில் லான்ச் செய்தார். தொடர்ந்து இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தனது தோழியும் நடிகையுமான சமந்தாவுக்கு நயன்தாரா கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் 9ஸ்கின் நிறுவனத்தின் அழகு சாதன பொருட்கள் இருக்கிறது.
நயன், சாம் இருவரும் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் எந்தவித ஈகோவும் இல்லாமல் பழகி வருகின்றனர். குறிப்பாக இருவரும் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.