×

குழந்தையுடன் கூலாக இருக்கும் நயன்... வீடியோ வைரல்...

 

கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பிசியான நடிகையாக இருந்து வரும் நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 4 மாதத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது என அறிவித்தனர்.