மகன்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நயன்-விக்கி தம்பதி.
Sep 28, 2023, 12:47 IST
நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு காதலர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். தொடர்ந்து இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இந்த நிலையில் அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்த இந்த தம்பதி. தற்போது தங்கள் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதற்காக பல விதங்களில், கேக், டோனட், சாக்லேட் என மலை போல குவித்து வைத்துள்ளனர். பிறந்தநாள் தொடர்பான புகைப்படத்தை அவர்கள் பதிவிட்டதும் பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.