×

தாய் பாசம் பேசும் முதல் பாடல்... நயன்தாராவின் ‘O2’ புதிய அப்டேட் !​​​​​​​

 

நயன்தாராவின் ‘O2’ படத்தின் முக்கிய அப்டேட் படக்குழு வெளியிட்டுள்ளது. 

தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா, சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘O2’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜி எஸ் விக்னேஷ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக பார்வதி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். அவரது மகனாக யூடியூப் பிரபலம் ரித்விக் நடிக்கிறார். படத்தின் வில்லனாக 'கே 13' படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, ஆர்என்ஆர் மனோகரன், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திரில்லர் டிராமா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள அம்மா - மகன் பாசப்பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.